
ஏனைய பகுதிகள்
தேடுக...
-
Last Updated: 16.02.2019
-
Hits: 1958

ஆக்ஷன் படம், மசாலா படம், காமெடி படம் என்று விதவிதமாக தங்கள் கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டு நடிக்கும் ஹீரோக்கள் இப்போது போட்டிபோட்டு தாடி வளர்த்து நடிக்கின்றனர். சிங்கம் படத்துக்கு
மீசை வைத்து நடித்த சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தாடி வளர்த்துள்ளார்.
ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் அலைபாயுதே மாதவன் தாடியும், மீசையுமாக பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். புதிய படமொன்றுக்காக அருவா மீசையுடன் சுற்றிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி அப்படம் டிராப் ஆனதையடுத்து புதிய படத்துக்காக தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே சூது கவ்வும் படத்தில் இவர் தாடி வளர்த்து நடித்திருக்கிறார். திரு இயக்கத்தில் நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்துக்காக விஷால் தாடி வளர்த்து வருகிறார்.
பட்டதாரி வாலிபன் படத்தில் நடிக்கும் தனுஷ் இப்படத்துக்கும், தொடர்ந்து நடிக்க உள்ள கே.வி.ஆனந்த் படத்துக்கும் தாடி வளர்க்கிறார். இளம் நடிகர்கள்தான் இப்படி என்றால் கோச்சடையான் படத்தில் நடிக்கும் ரஜினியும், விஸ்வரூபம் 2 படத்தில் நடிக்கும் கமலும் தாடி வைத்து நடிக்கின்றனர். ஹீரோக்கள் போட்டி போட்டுக்கொண்டு தாடி வளர்ப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காணொளிகள்!
























தொடர்புகள்
- Stockholm, Sweden
- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.