தேடுக...

 

Share

உடல் நலம் மீது மிகுந்த கவனம் செலுத்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணமாக பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்று இந்தி திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் என உச்சம் தொட்டார். சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு குடும்பத்துடன் ஐக்கிய அமீரகத்தின் துபாய் சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீதேவி தனது உடல்நலம் மீது அதிக கவனம் செலுத்தி வந்தார். ஜிம், யோகா, டயட், நீச்சல், டென்னிஸ் என்று பிசியாகவே இருந்து வந்தார். 54 வயதானாலும் இன்னும் இளமையாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தி திரை உலகில் கோலோச்சிய காலகட்டத்தில் ஸ்ரீதேவி தனது மூக்கு மற்றும் உதடுகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகூட்டினார். நல்லா இருந்த மூக்கை ஸ்ரீதேவி ஏன் இப்படி கெடுத்துக் கொண்டார் என்று அவரது நலம் விரும்பிகள் பலரும் அப்போது ஆதங்கப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் கலந்து கொண்டார்.அப்போது அவரது முன்னழகு வழக்கத்தை விடவும் பெரிதாக காணப்பட்டது. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதாக்கியதாக பேச்சு கிளம்பியது. மட்டுமின்றி கடந்த மாதம் மீண்டும் உதடுகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக செய்திகள் வெளியாகின.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதில் அவரின் உதடுகள் விகாரமாகிவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது. இந்த நிலையில் அழகை மேலும் மெருகூட்ட ஸ்ரீதேவி செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் அவரது உடல்நலத்திற்கு கேடு விளைவித்துவிட்டதோ என்று அவரது நலம் விரும்பிகள் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 237 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On