தேடுக...

 

Share

பெண்கள் அவர்களது கணவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பும், அக்கறையும். பிள்ளைகள் பெற்றெடுத்த பின்னும் கூட, தங்களை ஒரு குழந்தைப் போல கணவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள் பெண்கள்.

இந்த இடத்தில் தான் பல ஆண்கள், அவர்களது மனைவிகளுக்கு தவறு இழைக்கின்றனர். திருமணத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த அன்பும், அக்கறையும் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் இருப்பதில்லை. கணவர் குறைந்த பட்ச நேரமாவது தங்களுடன் கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதனை புரிந்து கொண்டு ஆண்கள் தங்களது மனைவிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.

அதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டுவிட்டு வர வேண்டும் என்பதெல்லாம் மனைவி எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகளை தெரிந்து, புரிந்து உங்கள் மனைவியின் ஆசை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்.

சமையல் செய்யும் போது காய்கறிகள் நறுக்கித் தருவது, உலை வெந்த போது இறக்கி தருவது, துணிகள் அயன் செய்வது, குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என சிறு சிறு விஷயங்களில் கணவன் உதவ வேண்டும் என மனைவிகள் ஆசைப்படுவார்கள். இதை எல்லாம் கணவன்மார்கள் புரிந்துகொண்டு மனைவி கேட்காமலே செய்தால் மனைவிமார்கள் மிகவும் சந்தோசம் அடைவார்கள்.

மாலை நேரங்களில் கணவனுடன் வாக்கிங் செல்வது மனைவிகளுக்கு பிடித்தமான விஷயம். வாரம் முழுக்க இல்லையெனிலும் வாரக்கடைசியிலாவது செல்ல வேண்டும் என்பது அவர்களது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு.

 குழந்தை பிறந்ததில் இருந்து மனைவிகள் மட்டும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கணவன் எண்ணக்கூடாது. எனவே, முடிந்த வரை வீட்டில் பெண்கள் வேறு வேலைகள் செய்யும் போது, கணவன் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என மனைவி விரும்புவாள்.

கணவன் அவரது தாய் தந்தை மீது எடுத்துக் கொள்ளும்  அக்கறையும், அன்பும், தங்களது தாய், தந்தை மீதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது மனைவிகளின் ஆசை. இதனை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்ளவதில்லை.

பெண்கள் மனமுடைந்து போகும் நிலைகளில், உடல் நிலை சரியில்லாது போகும் போது அவர்களது கணவன் மனதளவில் மிகவும் ஆதரவாக இருக்க வேண்டும் என பெண்கள் நினைப்பது இயல்பு. ஆனால் அதிக வேலையின் காரணமாக ஆண்கள் மனைவியுடன் இருக்க நேரம் ஒதுக்குவதில்லை.

மனைவிகள் கணவர்களிடம் வெறுப்பது மாதவிடாய் காலத்தில் அவர்களை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது. அவர்கள் உடலளவில் பெருமளவு சோர்வடையும் நாட்கள் அவை. எனவே, ஆண்கள் அவர்களது நிலையை புரிந்துக்கொண்டு, அவர்களை அரவணைத்து, அக்கறையுடன் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

கணவன்மார்கள் சம்பள கவரை அப்படியே மனைவியிடம் குடுத்த்தாலும் தங்களுக்கு தாங்களே பொருட்கள் வாங்குவதை மனைவிமார்கள் விரும்புவது கிடையாது. சின்ன ஒரு பொருளாக இருந்தாலும் அது கணவன் தான் கையால் வாங்கி தரவேண்டும் என்று மனைவிமார்கள் எதிர் பார்ப்பார்கள்.

விசேஷமான நாட்களில் கணவன் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைத் வாங்கித்‌ தரவேண்டும் என மனைவி எதிரப்பார்ப்பது இல்லை. அன்று தன்னுடன் சேர்ந்து நேரத்தை கழித்த்தாலே அவர்களுக்கு அது மிகப்பெரிய பரிசாகும்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 241 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On